கொழும்பு அத்துருகிரிய பிரதேசத்தில் வயோதிபப் பெண் ஒருவர் ஜீப் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார்.
அத்துருகிரிய - கொடகம வீதியில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் 74 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொடகமவிலிருந்து அத்துருகிரிய நோக்கிப் பயணித்த ஜீப் வாகனம் ஒன்று வீதியில் பயணித்த மேற்படி வயோதிபப் பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது ஜீப் வாகனத்தின் சாரதியும் வயோதிபப் பெண்ணும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், வயோதிபப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் சடலம் அத்துருகிரிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் அத்துருகிரிய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.