வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ.

tubetamil
0

 காற்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ  படைத்துள்ளார். 

போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ உலகம் முழுவதும் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.

இதுவரை கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். ரொனால்டோ தொட முடியாத ஒரு கோப்பை என்றால் அது உலகக்கோப்பை தான்.எனினும், கழக மட்டப்போட்டிகளில் அனைத்து கிண்ணத்தையும் வென்றாலும், உலகக் கோப்பையில் போர்த்துக்கல் அணி காலிறுதி வரை வந்து அதைத் தாண்டி அடுத்த கட்டமான அரை இறுதிப் போட்டிக்கு இது வரை தகுதி பெற்றதே இல்லை. 


இந்நிலையில், நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்த்துக்கல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் 34வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோலை பதிவு செய்தார்.

இதன் மூலம் தற்போது வரை காற்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக மெஸ்ஸி 838 கோல் அடித்து 2வது இடத்தில் உள்ளார். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top