கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு!!

tubetamil
0

 SADAQA BULLETING WELFARE FOUNDATION' நிறுவனத்தின் அனுசரணையில் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகள், அப்பியாசக் கொப்பிகள் மற்றும் புத்தகப்பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. 

பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் தலைமையில் நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில் 'SADAQA BULLETING WELFARE FOUNDATION' அமைப்பின் பணிப்பாளரும் பொறியியலாளருமான எம்.சீ.கே.நிஸாத் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.


இதன்போது, அவர் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பொதிகளை வழங்கி வைத்தார்.மேலும், இந்நிகழ்வில் ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர், ஆசிரியர் ஏ.எம்.எம் சாஹிர், பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ரீ.ஏ.முனாப், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுச் செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top