இலங்கையை அழித்த கோட்டாபய ராஜபக்ச, தற்போது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவருந்தி மகிழ்வதாக இலங்கைத் தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
2022ல் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட ராஜபக்ச, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டு மகிழ்ந்ததை தான் பார்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களும் இனவாதத்தை ஊக்குவிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த தேர்தலில் இது ஒரு நல்ல அறிகுறியாகும் என்று சாணக்கியன் தெரிவித்துள்ளார்.