இலங்கையின் மேம்பாட்டை வலியுறுத்தியுள்ள அவுஸ்திரேலியா.!!

tubetamil
0
 கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமைகளை தீவிரமாகப் பாதுகாப்பதற்குத் தேவையான மாற்றங்களை இலங்கை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்று அவுஸ்திரேலியா (Australia) விருப்பம் வெளியிட்டுள்ளது.

அத்துடன், நீண்டகால பங்காளியாக இலங்கை தனது மனித உரிமைக் கடமைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதியை முன்னெடுப்பதற்கும் ஆதரவளிப்பதில் உறுதியாக இருப்பதாக அவுஸ்திரேலியா கூறியுள்ளது.

இந்தநிலையில், சிவில் சமூகத்தை துன்புறுத்துதல் மற்றும் அச்சுறுத்துதல், ஜனநாயக அச்சுறுத்தல்கள், சமநிலை பாதிப்பு, கருத்து மற்றும் சங்கம் ஆகியவற்றின் சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்தும் சட்டங்களை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட உயர் ஆணையரின் கவலைகளை தமது நாடு அங்கீகரிப்பதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.



இலங்கையில், பொருளாதார நெருக்கடியின் மனித உரிமைகள் தாக்கங்கள் மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எனினும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் உட்பட அனைத்து புதிய சட்டங்களும் இலங்கையின் மனித உரிமைக் கடமைகளை நிறைவேற்றும் வகையில் அமைய வேண்டும் என அவுஸ்திரேலிய தூதுக்குழு கோரியுள்ளது.

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையத்திற்கான யோசனை தொடர்பில் கருத்துரைத்துள்ள் அவுஸ்திரேலிய குழு, பொருத்தமான ஆதாரங்கள் மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது,


மேலும் நம்பிக்கையைப் பெறுதல் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தல் அவசியம் என்றும் குழு தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான 57 ஆவது அமர்வில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜெனீவாவில் உள்ள அவுஸ்திரேலிய தூதுக்குழு இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளது.  

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top