இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் ஊட்டச் சத்து குறைபாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் ரோஹினி கவிரத்னவினால், இந்த அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
முன்னதாக நுவரெலிய மாவட்டத்திலேயே ஊட்டச்சத்து குறைபாடுடைய சிறுவர்கள் அதிகமாக வாழ்கின்றமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.