செயற்கை உணவுகளை உண்பதால் சிறு குழந்தைகளில் அரிப்புத் தோலழற்சி ஏற்படும் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தோல் நோய் வைத்திய நிபுணர் ஸ்ரீஆனி சமரவீர தெரிவித்துள்ளார்.
உலக அடோபிக் எக்ஸிமா தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுமார் முப்பது சதவீத குழந்தைகள் gouty eczema அல்லது atopic eczema நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வயது வந்தவர்களில் பத்து சதவீதம் பேருக்கு தோலழற்சி உருவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.