எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 22 மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்படும் அதிகபட்ச நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களான 19 பேர் கம்பஹா மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள்.
அதைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்கள் மக்கள் தொகை மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் மாறுபட்ட எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதன்படி திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நாடாமன்ற உறுப்பினர்களான நான்கு பேர் தெரிவு செய்யப்படுவார்கள்.
தேர்தல் ஆணையக தகவல்களின்படி கொழும்பில் இருந்து 18 பேரும், களுத்துறையில் இருந்து 11 பேரும், கண்டியில் இருந்து 12 பேரும், மாத்தளையில் இருந்து 5 பேரும், நுவரெலியாவில் இருந்து 8 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதனை தவிர காலியில் இருந்து 9 பேரும், மாத்தறையில் இருந்து 7 பேரும், ஹம்பாந்தோட்டையி;ல் இருந்து 7 பேரும், யாழ்ப்பாணத்தில் இருந்து 6 பேரும், வன்னியில் இருந்து 6 பேரும், மட்டக்களப்பில் இருந்து 5 பேரும், திகாமடுல்லையில் இருந்து 7 பேரும், குருநாகலில் இருந்து 15 பேரும், புத்தளத்தில் இருந்து 8 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளனர் அநுரதபுரத்தில் இருந்து 9 பேரும், பொலநறுவையில் இருந்து 5 பேரும், பதுளையில் இருந்து 9 பேரும், மொனராகலையில் இருந்து 6 பேரும், இரத்தினபுரியில் இருந்து 11 பேரும், கேகாலையில் இருந்து 9 பேரும் மக்களால் தெரிவு செய்யப்படவுள்ளனர்.