தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினை இரண்டாக பிளவுபடுத்தியதற்காக விடுதலைப்புலிகளினால் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனை தான் 2005 ஆம் ஆண்டு தேர்தலை பகிஸ்கரிக்கச்செய்தது என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பு கல்லடி மீனிசை பூங்காவில் நடைபெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் கிழக்கு இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேசலோகநாதன் குருக்கள்,ஜேசுசபை துறவி ஜோசப்மேரி ஆகியோர் ஆசியுரை வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்வின் சிறப்பு பேச்சாளர்களாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன் ஆகியோரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைடெ;னமும் கலந்துகொண்டனர்.
அத்துடன் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் உறுப்பினர்களான வசந்தராஜா,எஸ்.சிவயோகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளல் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.