மீண்டும் ஒரு வெடிவிபத்து...!!

tubetamil
0

 ஜேர்மன் நகரமொன்றில் திங்கட்கிழமையன்று வெடி விபத்தொன்று நிகழ்ந்த நிலையில், அதே நகரில் மீண்டும் ஒரு சிறிய வெடிவிபத்து நிகழ்ந்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மன் நகரமான கொலோனில், திங்கட்கிழமையன்று நிகழ்ந்த வெடிவிபத்தொன்றில் ஒரு கட்டிடம் சேதமானது, ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.


இந்நிலையில், அதே கொலோன் நகரத்தில், இன்று அதிகாலை 5.00 மணியளவில், கடைகள் அதிகம் உள்ள city centerஇல் மீண்டும் ஒரு வெடிவிபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

முந்தைய வெடிவிபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில், இந்த இரண்டாவது வெடிவிபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து எந்த தகவல்களும் வெளியாகாத நிலையில், பொலிசார் அந்த சம்பவங்கள் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top