ஜனாதிபதி தேர்தல் ...!

tubetamil
0

 ஜனாதிபதி தேர்தலில் தனக்கு விருப்பமான வேட்பாளர் வெற்றி பெறுவார் என தொழில் வல்லுனர்கள், வர்த்தகர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கோடிக்கணக்கில் பணம் மற்றும் சொத்துக்களை பந்தயம் கட்டி தோல்வியடைந்துள்ளனர்.

இதன்படி நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள பணக்கார மீன் வியாபாரி ஒருவர் 5 கோடி ரூபா பணம் மற்றும் வாகனங்கள் மற்றும் சொகுசு வீட்டையும் பந்தயம் கட்டியுள்ளார்.


யாழ்ப்பாணம் பிரதேசத்தில் 03 கோடி ரூபா பெறுமதியான பந்தயத்தில் பணக்கார வர்த்தகர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தலை மொட்டை அடித்தல் உட்பட பல வகையான பந்தயங்களில் பலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இளைஞர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்கள், கையடக்கத் தொலைபேசிகள், பல இலட்சம் ரூபாய் பணம் போன்றவற்றை பந்தயம் கட்டியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top