அரசியல்வாதிகளை படுகொலை செய்து, அவர்களது வீடுகளுக்கு தீ மூட்டுவதற்கு ஜே.வி.பி.யினர் காத்திருப்பதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 73ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பி.யின் அடிமட்ட தொண்டர்கள் இவ்வாறு ஊர்களில் காத்திருக்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஒடுக்குவதற்கு ஜே.வி.பி.யினர் காத்திருப்பதாகவும் இதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படமாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவிதமான திட்டங்களும் இன்றி ஜே.வி.பி ஆட்சி அதிகாரத்தைக் கோருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.