உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு இரத்து..!!

tubetamil
0

 

இலங்கையில் ஏற்கனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து, புதிதாக வேட்புமனுக்களை கோரும் சட்ட ஏற்பாடுகளை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த தீர்மானமானது, நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை அமர்வில் எடுக்கப்பட்டுள்ளது. 

2022ஆம் ஆண்டு நெருக்கடி நிலைக்கு பின்னர் 2023இல் உள்ளூராட்சி தேர்தலை நடத்தவேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையின் பேரில், தேர்தல் முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.


அதற்காக வேட்புமனுக்களும் கோரப்பட்ட போதிலும் தேர்தலுக்கான போதிய நிதியில்லை என அரசாங்கத்தினால் கூறப்பட்ட காரணத்தினால் அந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது

இந்தநிலையில்  உயர்நீதிமன்றம், அண்மையில் வழங்கிய தீர்ப்பில், அரசாங்கத்தின் இந்த முடிவு, அடிப்படை உரிமையை மீறும் செயல் என்று கண்டறிந்தது.

அத்துடன், தேர்தல் உடனடியாக நடத்தப்படவேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top