திடீரென காணாமல்போயுள்ள அரச வாகனங்கள்..!!

tubetamil
0

 வடமத்திய மாகாண சபைக்கு சொந்தமான 19 வாகனங்கள் மற்றும் 10 மோட்டார் சைக்கிள்கள் காணாமல்போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்த வருடம் வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள், கல்வி அமைச்சு உள்ளிட்ட பல அலுவலகங்களின் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு காணாமல்போயுள்ளன.

இவ்வாறு காணாமல்போன இந்த 19 வாகனங்களில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்திய கார்கள் மற்றும் ஜீப்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பதிவு சான்றிதழ்களின் படி வடமத்திய மாகாண சபைக்கு சொந்தமான இந்த வாகனங்கள் மாகாண சபையில்  காணப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top