முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இணைந்து பொதுக் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து இந்த கூட்டணி அமைக்கப்பட உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பு இல்லத்தில் இது குறித்த சந்திபொன்று நேற்று நடைபெற்றுள்ளது.
பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று நிட்டம்புவ பகுதியில் வைத்து சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து நேற்றைய தினம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.