கிளிநொச்சி பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாகவே குளக்கரை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் 2613 லீட்டர் கோடாவும், 24 லீட்டர் கசிப்பும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் (04.09.2024) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.