யாழ்ப்பாணத்தில் தந்தை கைப்பேசி கொடுக்காததால் 13 வயதுச் சிறுவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.இதன்போது, அந்தோனியார் சேர்ச் வீதி, பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய மேர்வின் டயஸ் சிந்துஜன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் விளையாடுவதற்கு அவனது தந்தை கைப்பேசியை கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், சிறுவன் வீட்டின் அறையில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.
இந்நிலையில், சிறுவனின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இதேவேளை, அளவெட்டி அருணோதயாவில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.