நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், இலங்கையில் 123,888 மெட்ரிக் தொன் டீசலும் 13,627 மெற்றிக் தொன் சுப்பர் டீசலும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை 90,972 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 வகை பெட்ரோல் மற்றும் 18,729 மெட்ரிக் தொன் ஒக்டேன் 95 வகை பெட்ரோல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் முப்பதாயிரத்து இருநூற்று தொண்ணூற்று ஐந்து மெற்றிக் தொன் விமான எரிபொருள் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.