நோயாளர்களுக்கு ஏற்பட்ட மருந்து பற்றாக்குறைக்கு எதிராக குரல் எழுப்பிய தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று நண்பகல் 12.00 மணியிலிருந்து ஒரு மணி வரை இக்கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சுகாதாரத்துறையில் ஏற்பட்ட பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும்போது அதற்கு எதிராக தீர்மானங்கள் எதையும் எடுக்காது வெளிக்கொண்டு வந்தவர்களிடம் உண்மை தன்மைகளை ஆராய முற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த அடக்குமுறை நடவடிக்கைகளை கைவிடுமாறு கோரிக்கை முன்வைத்து இக்கவனயீப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.