தொடருந்து சேவையானது நாளைய தினம் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என தொடருந்து திணைக்கள பிரதிப் பொது முகாமையாளர் ஜே.என்.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ளது. இவ்வாறான நிலையில் தேர்தல் தினத்தன்று முன்னெடுக்கப்படும் தொடருந்து சேவை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், நாளை சேவையில் ஈடுபடும் தொடருந்துகள் அனைத்தும் தொடருந்து பாதைகளில் வழமை போன்று செல்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.