நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வி அடைந்ததன் பின்னணில் சதி உள்ளதாக கட்சி உறுப்பினர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த ஹர்ஷ டி சில்வாவும் இடையில் இரகசிய உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு, நாவல பகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது இது தொடர்பில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவது குறித்து ஹர்ஷ டீ சில்வா ஆலோசனை முன்வைத்துள்ளார். எனினும் இதற்கு கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டமையால் ஜனாதிபதி தேர்தலில் சஜித் தோல்வியடைந்தார். இனியும் வெட்கமின்றி அவர்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டாம். அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனினும் கட்சி உறுப்பினர்களை சமாதானம் செய்த ஹர்ஷ, ரணிலுடன் ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என்றும் ருவான் விஜேவர்தனவுடன் ஒப்பந்தம் போடுவோம். அவர்தான் எங்களுடன் ஒப்பந்தம் செய்வார் என குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக கட்சி கூட்டத்தின் போது காரசாரமான வாக்குவாதங்கள் எழுந்துள்ளன. சுமார் 125 வாக்களிப்பு நிலைய பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், வாக்களிப்பு நிலையப் பிரதிநிதிகளும் ஹர்ஷ டி சில்வாவை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். நிலைமை எல்லைமீறிச் சென்றமையினால், ஹர்ஷ டீ சில்வா அங்கிருந்து அவசரமாக வெளியேறிச் சென்றதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.