ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதா அல்லது விரைவான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதா என்பது குறித்து ஆலோசிக்க வேண்டியுள்ளது.
எவ்வாறாயினும் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்காமல் செயற்பட முடியாது எனவும், அதற்கமைய நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.