வடக்கில் சாதி ஒடுக்குமுறையினால் அனுமதிக்கப்படாத இந்துக்கள்..!

tubetamil
0

 வடக்கில் சாதி ஒடுக்குமுறைமை காரணமாக இந்துக்களை உள்ளே அனுமதிக்காத சில கோயில்கள் இருக்கின்றன. அது அரசாங்க முறைமையினால் ஏற்பட்ட பிரச்சினையல்ல, மாறாக அது வடக்கின் கலாசார ரீதியிலான பிரச்சினையாகும் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.   

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய  நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், உல­க­ளா­விய ரீதியில் உயர் வரு­மானம் பெறும் சில நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் உயர் மத சுதந்­தி­ரத்தைக் கொண்­டி­ருக்கும் நாடு­களில் ஒன்­றாக இலங்கை இருக்­கி­றது.

பௌத்­தர்­களும் இந்­துக்­களும் பல நூற்­றாண்டு கால­மாக அமை­தி­யாக ஒரு­மித்து வாழ்ந்து வரு­கின்­றனர். பௌத்த விகா­ரை­களை பாருங்கள் அவற்­றுக்குள் இந்து வழி­பாட்டு பகு­திகள் உள்­ளன. தெற்கில் உள்ள இந்து கோயில்­களில் அவர்­க­ளது பண்­டி­கை­களை கொண்­டா­டு­வ­தற்­கான சுதந்­திரம் உள்­ளன.

மோதல்கள் தொடர்பில் ஆங்­காங்கே சில சம்­ப­வங்கள் எப்­போதும் இருக்கும் சட்­டங்கள் மற்றும் தண்­ட­னை­களின் ஊடாக மாத்­திரம் எம்மால் ஒரு முழு நிறை­வான சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது.

மத தலை­வர்­க­ளுக்கு அவர்­களை பின்­பற்­றுவோர் மத்­தியில் நம்­பிக்­கைகள் சார்ந்த பரஸ்­பர புரிந்­து­ணர்வு மற்றும் சகிப்புத்                தன்­மையை  கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய பொறுப்­புண்டு. வடக்கை பாருங்கள். அங்கே சாதி ஒடுக்­கு­மு­றைமை கார­ண­மாக இந்­துக்­களை உள்ளே அனு­ம­திக்­காத சில கோயில்கள் இருக்­கின்­றன.


அது அர­சாங்க முறை­மை­யினால் ஏற்­பட்ட பிரச்சி­னை­யல்ல மாறாக அது வடக்கின் கலா­சார ரீதி­யி­லான பிரச்­சி­னை­யாகும். அதனை இந்து மத தலை­வர்­களே தீர்க்க வேண்டும். அதில் அர­சாங்கம் தலை­யிட்டால் அவர்கள் தமது மத சுதந்­திரம் பறிக்­கப்­ப­டு­வ­தாக  கூறுவார்கள்.

நாம் அர­சாங்கம் என்ற ரீதியில் அர­சி­ய­ல­மைப்பில் கூறப்­பட்­டுள்­ள­வாறு அனைத்து பிர­ஜை­க­ளுக்­கு­மான மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தி பாது­காப்போம். இது குறித்த தனித்த பிரிவு எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ளது என குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top