உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இன்றும் தபால் நிலையத்திற்கு சென்று வாக்கு அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாக்கு அட்டையை பெறுவதற்கு அலுவலக நேரத்தில் தபால் நிலையத்திற்குச் செல்லும்போது அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமாகும் என பிரதி தபால் மா அதிபர் ரஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகளில் 98 வீதமானவை வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.