அதிகளவில் களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்....!

tubetamil
0

 ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக பாதுகாப்புப் படைத்தலைவர்கள் அதிகளவான இராணுவத்தினரை முகாம்களில் இருந்து பொதுப்பாதுகாப்பிற்காக களமிறக்கியுள்ளனர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற விசேட தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அறுபத்தைந்தாயிரம் பொலிஸாரை வாக்களிப்புப் பணிகளுக்காக ஈடுபடுத்திய பின்னர், பொதுச் சொத்துக்கள், அரச சொத்துக்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க பொலிஸ் நிலையங்களில் போதிய ஆட்கள் இல்லாத காரணத்தினால் முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


இவர்கள் அனைவருக்கும் கட்டளையிடும் வகையில், பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் கீழ் விசேட நடவடிக்கை அறை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சிவில் தற்காப்புப் படை வீரர்களை ஈடுபடுத்துவதுடன், அரச நிறுவனங்கள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்புக்காக பொலிஸாருக்கு உதவியாக அவர்களை ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், பொலிஸாருக்கு இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் ஆயுதப்படைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்குத் தேவைப்பட்டால் அதிகபட்ச பலத்தைப் பயன்படுத்துமாறு பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top