யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பரப்புரை கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டமானது, இன்று நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பார் தம்பித்துரை ரஜீவ் ஏற்பாட்டில் இந்த தேர்தல் பரப்புரை கூட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், கட்சியின் யாழ். மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.