விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் GOAT படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. அதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். தற்போது முன்பதிவிலேயே சாதனை வசூலை GOAT படம் செய்து வருகிறது.
மேலும் படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். அதில் அவர்கள் கூறும் விஷயங்கள் பெரிய அளவில் வைரல் ஆகின்றன.
நடிகர் பிரேம்ஜி அளித்த பேட்டியில் GOAT படம் இந்த வருடம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என கூறி இருக்கிறார்.
1500 கோடி வசூலிக்கும் என தான் வெங்கட் பிரபுவிடம் கூறி இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.