தளபதி விஜய் - வெங்கட் பிரபு - ஏஜிஎஸ் கூட்டணியில் உருவாகி கடந்த 5ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் Greatest of All Time. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
விஜய் படம் என்றாலே கண்டிப்பாக வசூல் மழை பொழியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதுவே மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் என்றால் சொல்லவே தேவையில்லை. அப்படி மாபெரும் எதிர்பாப்ரில் வெளிவந்த GOAT இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.GOAT படம் முதல் நாள் ரூ. 95 கோடி முதல் ரூ. 100 கோடி வரை வசூல் செய்திருக்கும் என தகவல் வெளிவந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து இப்படம் முதல் நாள் ரூ. 126 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அறிவித்து இருந்தனர்.இந்த நிலையில், இரண்டு நாட்கள் முடிவில் GOAT படம் உலகளவில் ரூ. 148 கோடி வசூல் செய்துள்ளது என தெரிவிக்கின்றனர். ஆனால், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து இரண்டு நாட்கள் வசூல் குறித்து அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.