You Tube பார்த்து அறுவை சிகிச்சையால் மரணம்..!!

tubetamil
0

 யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவரால் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான பீகார், சரன் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் கிருஷ்ண குமார்  இந்த சிறுவனுக்கு பலமுறை வாந்தி வந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால், சிறுவனின் பெற்றோர் சரன் நகரில்உள்ள கணபதி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு, அஜித் குமார் புரி என்ற மருத்துவர் சிறுவனுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

பின்னர், சிறுவனுக்கு பித்தப்பையில் கல் இருப்பதால் தான் வாந்தி போன்ற உபாதைகள் ஏற்படுவதாக மருத்துவர் கூறியுள்ளார்.

இதனால், அந்த மருத்துவர் பெற்றோர் சம்மதம் இல்லாமலேயே யூடியூப் பார்த்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.


இதன்பின்னர், சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் சிறுவன் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலி மருத்துவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.  


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top