2024-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கான வெற்றியாளர்களின் அறிவிப்பு இன்று தொடங்கியது.
மருத்துவம் அல்லது உடலியங்கியல் துறையில் இன்று நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோ ஆர்.என்.ஏ (ரிபோநியூக்ளிக் அமிலம்) கண்டுபிடித்ததற்காக அவருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மைக்ரோ ஆர்.என்.ஏ உடலில் செல்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.
இரண்டு மரபியல் விஞ்ஞானிகளும் 1993-இல் மைக்ரோ ஆர்.என்.ஏவைக் கண்டுபிடித்தனர்.
மனித மரபணுக்கள் DNA மற்றும் RNA-வால் ஆனவை. மைக்ரோ ஆர்.என்.ஏ அடிப்படை ஆர்.என்.ஏவின் ஒரு பகுதியாகும்.
இது கடந்த 500 மில்லியன் ஆண்டுகளாக பல செல் உயிரிகளின் ஜீனோமில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.
இன்றுவரை, பல்வேறு வகையான மைக்ரோ ஆர்.என்.ஏவின் 1,000 க்கும் மேற்பட்ட மரபணுக்கள் மனிதர்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.