பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் நேற்று 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாலி எண்னிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
பீகாரின் சிவான் மாவட்டத்தில் பகவான்பூர் காவல் நிலைத்திற்கு உட்பட்ட மதர் கிராமத்தில் சிலரும், சரண் மாவட்டத்தை சேர்ந்த சிலரும் உள்ளூரில் உள்ள கடை ஒன்றிற்கு சென்று, சாராயம் குடித்துள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற அவர்களில் சிலருக்கு பார்வை இழப்பு, வாந்தி மற்றும் வயிற்று வலி ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து கள்ளச்சாராயம் குடித்த 49 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், காலை நிலவரப்படி கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. அதன்படி, சிவான் மற்றும் சரண் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில், மேலும் 12 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே 20 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மாகர் மற்றும் அவுரியா ஊராட்சியைச் சேர்ந்த 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் குடித்து சுமார் 49 பேர் கடும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலவர உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் எநாவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.