விஜய் ஏசுதாஸ்- தர்ஷனா தம்பதிகளின் விவாகரத்திற்கான காரணத்தை விஜய் யேசுதாஸ் ஓபனாக தெரிவித்துள்ளார்.
விஜய் யேசுதாஸ் தந்தை யேசுதாஸை போல, சிறுவயதில் முதல் கர்நாடிக் இசை பயின்று அமெரிக்காவிலும் இசை சம்மந்தமான பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
இவர், தந்தை யேசுதாஸை போல, சிறுவயதில் முதல் கர்நாடிக் இசை பயின்று அமெரிக்காவிலும் இசை சம்மந்தமான பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
தமிழில் யுவன் சங்கர் ராஜா, இளையராஜா, ஏ ஆர் ரகுமான், தேவா, வித்யாசாகர், எம் எம் கீரவாணி, ஹாரிஸ் ஜெயராஜ், ஜிவி பிரகாஷ், டி இமான், போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்.
இப்படி தமிழுடன் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பாடல்களை விஜய் பாடியுள்ளார்.
இதற்கிடையில் பாடகர் விஜய் யேசுதாஸ், நடிகை திவ்யா பிள்ளையுடன் டேட்டிங் செய்து வந்த நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு தர்ஷனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். ஆனால் தற்போது இவர்கள் இருவரும் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். விஜய் ஏசுதாஸ்- தர்ஷனா விவாகரத்து குறித்து கேட்ட போது இருவரும் அதற்கான காரணத்தை கூறவில்லை.
பல நாட்களுக்கு பின்னர், பிரபல youtube சேனலுக்கு விஜய் யேசுதாஸ் கொடுத்த பேட்டியில், “ நாங்கள் இருவரும் பரஸ்பர புரிதலுக்கு பின்னரே விவாகரத்து செய்தோம். எனது வாழ்க்கையில் இது ஒரு மோசமான நாள். என்னுடைய பெற்றோருக்கு விருப்பம் இல்லை.
என்னுடைய மகளுக்கு 15 வயது ஆகிறது அவருக்கு ஓரளவு என்ன நடக்கிறது என்று புரியும். ஆனால் என் மகனுக்கு 9 வயது அவருக்கு எதுவும் புரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஒரு நபர் தான் செய்த செயலுக்கு பொறுப்பேற்காவிட்டால், அனைத்தும் பயனற்றதாகிவிடும்...” என அவர் தெரிவித்துள்ளார்