அனுரகுமாரவிடம் கையளிக்கப்பட்ட பாகிஸ்தான் ஜனாதிபதியின் விசேட கடிதம்..!!

tubetamil
0

 பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஃபஹீம், பாகிஸ்தான் ஜனாதிபதியின் விசேட கடிதம் ஒன்றை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளார்.



குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அவர் இலங்கையுடனான தனது நாட்டின் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ளார்.

சந்திப்பின் ஒரு பகுதியாக, உயர்ஸ்தானிகர் அஜீஸ், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் வாழ்த்துக் கடிதத்தை இலங்கை ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளார்.

அந்த கடிதத்தில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை பாகிஸ்தானிய ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் இலங்கையுடனான அதன் நெருங்கிய உறவுகளை ஆழமாக மதிக்கிறது. அத்துடன், இரண்டு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் நெருக்கமாக பணியாற்ற பாகிஸ்தான் விரும்புகிறது என்று ஜனாதிபதி சர்தாரி கூறியுள்ளார்.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top