முன்னைய அரசாங்கங்களின் ஊழல், மோசடிகள் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் அதனை தங்களுக்கும் வழங்குமாறு வசந்த சமரசிங்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான வசந்த சமரசிங்க, ஊழல் எதிர்ப்பு முன்னணி என்றொரு அமைப்பின் தலைவராக உள்ள நிலையில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்த ஆட்சியாளர்களின் ஊழல்கள் மற்றும் மோசடிகள் குறித்து தற்போதைய புதிய அரசாங்கத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ஏதுவாக முன்னைய அரசாங்கங்கள் மேற்கொண்ட ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான விபரங்கள் அறிந்துள்ளோர் அது தொடர்பான தகவல்களை தமக்கும் வழங்குமாறு அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.