சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்திருக்கும் அமரன் படத்தை தியேட்டர்களில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் நாட்டிற்காக உயிரை விட்ட மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அமரன் என்கிற பெயரில் படமாக எடுத்து இன்று ரிலீஸ் செய்துள்ளனர்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் படத்தில் மேஜர் முகுந்தாக நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரின் மனைவி இந்து ரெபகா வர்கீஸாக நடித்துள்ளனர்.
இதில் சிவகார்த்திகேயனின் நடிப்பு தீயாக இருக்கிறது. எப்பொழுதும் ஜாலியாக நடிக்கும் சிவகார்த்திகேயனா இது என வியக்க வைக்கிறார். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஜோடி அருமை. இருவரும் நம்மை கவர்வதாக இது குறித்து வெளியான பதிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.