ஆசிய வலைப்பந்து செம்பியன்ஷிப் அரையிறுதிப் போட்டியில் இலங்கை (Sri Lanka ) அணி ஹொங்கொங்கை (Hong Kong) வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
செம்பியன்ஷிப் 2024 இன் முதல் அரையிறுதியில் இலங்கை 71-47 என்ற புள்ளிக்கணக்கில் ஹொங்கொங் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவானது.
இதன்படி, இந்தப்போட்டித் தொடரில் இலங்கை மகளிர், இதுவரையான அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளது.
அதேநேரம், மற்றுமொரு அரையிறுதிப்போட்டியில் சிங்கப்பூர் மகளிர் அணி, மலேசிய மகளிர் அணியை 54க்கு 46 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்தநிலையில் இறுதிப்போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடர் இந்தியாவின் பெங்களூருவில் உள்ள கோரமங்களா உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.