பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க பதவி விலகியதையடுத்து இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மூத்த பேராசிரியர் கபில செனவிரத்ன 1990 இல் களனிப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் இளங்கலைப் பட்டத்தையும், 1997 இல் அமெரிக்காவின் வெய்ன் மாநில பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர என்பது குறிப்பிடத்தக்கது.