அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

tubetamil
0

 அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் தகவல் வழங்க விசேட தொலைபேசி இலக்கத்தினை பொலிஸார் அறிமுகம் செய்துள்ளனர்.


அதனடிப்படைடியில் குறித்த விடயம் தொடர்பில் தகவல் தெரிந்தால் 1997 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



அத்துடன் அரசால் பல்வேறு நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட வாகனங்கள் மோசடியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ குறிப்பிட்ட இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு அல்லது பிரித்து மறைத்து வைக்கப்பட்டு அல்லது சில இடங்களில் நிறுத்தி பாழடைவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார். குறித்த விடயங்கள் தொடர்பாக அறிவிக்க இந்த இலக்கத்தை பயன்படுத்த முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


அத்துடன் தகவல் கொடுப்பவர்களின் அடையாளம் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதாகவும், தகவல் கொடுப்பவர்களின் அடையாளத்தை வெளியிட வேண்டிய அவசியமில்லை எனவும் ஆனால் உண்மை தகவல்களை வழங்க வேண்டும்  பொலிஸார்  தெரிவித்துள்ளதுடன் இந்த தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் செயலில் இருக்கும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top