தபால் மூல வாக்களிப்பு தொடர்பான அறிவித்தல்...!

tubetamil
0

 எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 31, நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த தினத்தில்  வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களுக்கும் நவம்பர் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



அத்துடன் தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது பிரதேச செயலகத்திற்கோ சென்று வாக்களிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இதே வேளை 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல்  நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top