இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு..!

tubetamil
0

 இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்க்கப்பட்ட்டத்தை விட வளர்ச்சியடைந்துள்ளதாக உலக வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான பிராந்திய பணிப்பாளர் டேவிட் சிஸ்லான் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Development Update and Opening up to the Future என்ற அறிக்கையின் அடிப்படையிலேயே குறித்த விடயம் தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வருட ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பின்படி அது 4.4 சதவீத பொருளாதார வேகத்தை விட அதிகமாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ஏற்றுமதியை அதிகரிப்பது, வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது, சீர்திருத்தத்தை விரைவுபடுத்துவது உள்ளிட்ட 6 சவால்களுக்கு இலங்கை வெற்றிகரமாக தீர்வு காண முடிந்தால், வருடத்திற்கு கிட்டத்தட்ட 142,500 புதிய வேலை வாய்ப்புகளையும் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏற்றுமதி வருமானத்தையும் ஈட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top