கருத்து மோதல் தொடர்பிலான வதந்திக்கு பிரதமர் முற்றுப்புள்ளி!

tubetamil
0

 தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சிலர் பொய்யான செய்திகளை பரப்ப முயற்சித்துள்ளதாக இலங்கையின் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.



பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம் தொடர்பில் இலங்கை பிரதமர்  ஹரினி அமரசூரியவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல் ஒன்று நேற்றைய தினம் (25) வெளியாகியுள்ளது.


இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அத்திடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று அத்திடியில் நடைபெற்றமாய் குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top