அரச நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் பயன்படுத்தப்படுமாயின் அதற்கு முன்னர் அனுமதி பெறப்பட வேண்டும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், நினைவுச் சின்னங்கள், பலகைகள், மின்னணு மற்றும் அச்சிடப்பட்ட அறிக்கைகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவுறுத்தல் அடங்கிய அறிக்கையானது பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியின் கையொப்பத்துடன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.