தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வீதியில் உள்ள வெலிப்பன்ன நுழையாவிலை இடமாற்றத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வௌ்ளப்பெருக்கு காரணமாகவே குறித்த நுழையாவிலை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, வெலிபன்ன நுழைவாயில் நெடுஞ்சாலையில் நுழையவோ வெளியேறவோ முடியாத அளவுக்கு நீரில் மூழ்கியுள்ளது.
மத்துகம, அளுத்கம வீதியில் சுமார் 4 1/2 அடி உயரத்திற்கு நீர்மட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.