பல்கலைகழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் இராஜினாமா!

tubetamil
0

 இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் தமது இராஜினாமா கடிதங்களை  நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக  தெரிய வந்துள்ளது.

அதனடிப்படையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி. உடவத்த நேற்றுடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளதுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களும் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது. 

குறித்த இதேவேளை  2020 இல் நியமிக்கப்பட்ட தற்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top