மட்டக்களப்பில் தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் சமர்ப்பிப்பு!

tubetamil
0

 எதிர்வரும் 11 ஆம் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்துள்ளார்.



 குறித்த விடயம் தொடர்பில் நேற்று(23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.


இது குறித்து மேலும் அவர் தெரிவிலக்கையில்,   இதன் பிரதானமான தபால் மூலமாக வாக்கு விநியோகம் புதன் கிழமையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலிருந்து இடம்பெற்றது.


எனினும் 14003 பேருடைய தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கான தபால் மூலமாக வாக்குகள் புதன்கிழமை தபால் நிலையத்திற்கு பாரம் கொடுக்கப்பட்டுள்ளது.


தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டவுன் எதிர்வரும் இம்மாதம் மாதம் 30 ஆம் திகதி பொலிஸ்நிலையம், மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகத்திலும், அதுபோல் எதிர்வரும் 11 மாதம் முதலாம் மற்றும் நான்காம் திகதிகளிலும், ஏனைய அலுவலகங்களிலும், நான்காம் திகதி மேலதிகமாக பொலிஸ், மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகத்திலும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’’ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் 



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top