ஜனாதிபதி மாளிகை , அலரி மாளிகை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அதிரடி தீர்மானம்!

tubetamil
0

 ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துவதை தவிர்க்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியான பின்னர் எங்கு தங்கியிருக்கின்றார் என்பது தொடர்பில் பலரும் தேடி வருகின்ற நிலையிலேயே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.


இந்நிலையில்  தனது தனிப்பட்ட தேவைக்கு ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தப்போவதில்லை எனவும் ஜனாதிபதி செயலக விடயங்கள் மற்றும் பணி விடயங்களுக்கு மட்டுமே  அதனை பயன்படுத்தவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க  தான் இதுவரையில் தங்கியிருந்த வீட்டிலேயே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



அத்துடன் பிரதமரும் அலரி மாளிகையை பயன்படுத்தாமல் தனது வீட்டிலேயே தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.


முன்னர் அரச சொத்துக்களை வீண் விரயம் செய்வதை தவிர்த்த பணத்தை சேமிக்கவுள்ளதாக, தேர்தல் பிரச்சாரங்களின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top