குளிர்சாதனப்பெட்டியிலிருந்து மின்சாரம் தாக்கிய சிறுவன் உயிரிழப்பு...!

tubetamil
0

கம்பஹா, அத்தனகல்ல பிரதேசத்தில் வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் மின்சாரம் தாக்கியதால்  சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



அலவல பிரதேசத்தை சேர்ந்த 6 வயது நிரம்பிய ன முதலாம் தரத்தில் கல்வி கற்கும் தேஜான் தினுவர என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தாயும் தந்தையும் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் குளிர்சாதனப்பெட்டிக்கு அருகில் விழுந்து கிடந்துள்ளார்.


உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்தும் போது சிறுவர்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் பெற்றோர்களிடம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top