தெல்லிப்பளை பற்றைக்காட்டில் மீட்கப்பட்ட சொகுசு கார்

tubetamil
0

 யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக்க பொலிசார்  தெரிவித்துள்ளனர் .



குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காரை மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.


அத்துடன் பொலிஸ் நிலையத்தில் காரின் இலக்க தகட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , அது போலியானது என தெரிய வந்துள்ளது. அத்துடன் காரில் இருந்த ஆவணங்களும் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது.



குற்றச்செயல்களுடன் தொடர்புடைய காராக இருக்காமல் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கார் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top