களனிவெலி ரயில் வீதியின் அவிசாவளை ஹிங்குரல மற்றும் மிரிஸ்வத்த உப நிலையங்களுக்கு இடையில் உறங்கிக்கொண்டிருந்த இளம் தாய் ஒருவரும் அவரது மூன்று வயது மகளும் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை சென்று கொண்டிருந்தது. குறித்த ரயில் ஹிங்குரல உப நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட வேண்டும் என்பதனால் ரயில் வேகக் கட்டுப்பாட்டில் இயங்கியுள்ளது.
இதனிடையே குறித்த இருவரும் ரயில் பாதையில் உறங்கி கொண்டிருப்பதை அவதானித்த ரயில் சாரதி சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதுட இரு உயிர்களையும் காப்பாற்றியுள்ளார்.
இதன் போது குறித்த தாய்க்கும் மக்களுக்கும் சிறு காயம் ஏற்பட்டதால் இருவரும் சுவசெரிய அம்புலன்ஸ் மூலம் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த சம்பவத்திற்கு முகங்கொடுத்த தாய், தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தனது மகளுடன் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்க்க முயன்றதாக அவிசாவளை தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.