இந்த ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவா்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவா்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருவந்துட இதன் போது தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் 10 லட்சம் டொலா் ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்ராமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் மருத்துவம், இயற்பியல் துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (09) வேதியியல் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதியியல் துறைக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹஸாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக டேவிட் பேக்கருக்கு நோபல் பரிசின் ஒரு பாதியும் புரத கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக டெமிஸ் ஹஸாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகிய இருவருக்கும் இந்த நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
1901 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசை நிறுவிய ஸ்வீடனைச் சோ்ந்த ஆல்பிரட் நோபலின் நினைவுதினமான டிசம்பா் 10 ஆம் திகதி பரிசு வழங்கப்படுகிநிறமாய் குறிப்பிடத்தக்கது.